விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு பணியில் ரத்தக் கொடையாளர்கள் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கேட்டுக் கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், புதன்கிழமை உலக ரத்தக் கொடையாளர் தினத்தையொட்டி செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்து அவர் பேசியது: தமிழகத்திலேயே அதிக விபத்துக்கள் நிகழும் மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ரத்தக் கொடையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து அதிகமுறை ரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர், பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
முன்னதாக நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.பிரபாகர், செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவர் ஷேக்தாவூத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.