போடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
போடி பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதையடுத்து பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் சகதியாக மாறியதால் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர். ஏற்கெனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் வீட்டில் மரம் சாய்ந்தும், மா மரங்களில் மாங்காய்கள் உதிர்ந்தும் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை மாலையில் திடீரென மேகமூட்டத்தோடு இடி, மின்னலுடன் கொடைக்கானல், பாம்பார்புரம், செண்பகனூர், அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதில் வனப் பகுதிகளில் பல இடங்களில் சிறிய மரங்கள் சாய்ந்து விழுந்தன. மின் கம்பங்களில் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 மணி நேரம் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அவதியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.