பழனி பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பழனியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் உழவுப் பணிகளை தொடங்கினர். இதனிடையே கடந்த இரு நாள்களாக மழையின்றி காணப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை தொப்பம்பட்டி, மானூர், கோரிக்கடவு கிராமங்களில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியதால் வாகனங்கள் நீந்தி சென்றன. வயல்களில் மழைநீர் வெள்ளமாக காட்சியளித்தது. மேலும் சாலையோர வாய்க்கால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, இப்பகுதிகளில் தற்போது பெய்துள்ள மழை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.