Enable Javscript for better performance
ஊராட்சிப் பள்ளியில் நூலகம் அமைக்க கல்லூரி உதவி- Dinamani

சுடச்சுட

    

    பழனியை அடுத்த பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நூலகம் தொடங்க, கல்லூரி சார்பில் வெள்ளிக்கிழமை உதவிகள் வழங்கப்பட்டன.
         பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் உயராய்வு மையம் சார்பில், நடப்பு ஆண்டு விரிவாக்கப் பணியை முன்னிட்டு, பழனியை அடுத்த பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நூலகம் அமைக்க உதவிகள் வழங்கப்பட்டன.
         பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். பேரவை துணைத் தலைவர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். தமிழ்த் துறை பேராசிரியர்களும், மாணவியரும் பள்ளிக்கு நிலைப்பேழை, நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.
         கல்லூரி நூலகர் சாந்தா நூலகத்தின் பயன்பாடு குறித்து பள்ளி மாணவ, மாணவியர்க்கு விளக்கமளித்தார். வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு செய்திகள் எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் தங்கப்பாண்டியன், பேராசிரியர் மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, துறைத் தலைவர் வாசுகி வரவேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai