Enable Javscript for better performance
பழனியில் மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் 5 ஆம் வகுப்பு மாணவி சந்தியா மர்மக் காய்ச்சலால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மர்மக் காய்ச்சல் காரணமாக இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழனி அடிவாரம் மருத்துவ நகரைச் சேர்ந்த பால் வியாபாரி சந்தானம். இவரது மகள் சந்தியா(10), இங்குள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சந்தியாவை, பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சந்தியா உயிரிழந்தார். இதையடுத்து, சனிக்கிழமை சிறுமியின் உடல் பழனி கொண்டு வரப்பட்டது.
    மருத்துவ நகரில் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமலும்,  சாக்கடைகள் தூர்வாரப்படாமலும் இருப்பதால், கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai