டிராக்டரிலிருந்து தவறி விழுந்த சிறுமி சாவு

திண்டுக்கல் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
Published on

திண்டுக்கல் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
 திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் ஹேமமாலினி (7). இந்நிலையில், அய்யலூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்வதற்காக மாரிமுத்து, அவரது குடும்பத்தினர், உறவினர் நந்தினி (20) மற்றும் மற்றொரு பெண் என மொத்தம் 5 பேர் டிராக்டரில் புதன்கிழமை சென்றனர். 
 செங்குறிச்சி அடுத்துள்ள ஆலம்பட்டி அருகே சென்றபோது, திடீரென மூதாட்டி ஒருவர் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, டிராக்டர் டிப்பரில் நின்று கொண்டிருந்த சிறுமி ஹேமாமாலினி, நந்தினி ஆகிய இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் ஹேமாமாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நந்தினி, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்