பழனி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் புதன்கிழமை தனியார் தோட்டத்தின் மோட்டார் அறையில் பதுங்கியிருந்த
Published on
Updated on
1 min read

பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் புதன்கிழமை தனியார் தோட்டத்தின் மோட்டார் அறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
 பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் தேக்கன்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில்  மோட்டார் அறையில் மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனைப் பார்த்த தோட்ட உரிமையாளர், பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப்படை வீரர்கள் மலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பு, சுமார் பத்து அடி நீளமும், இருபத்தைந்து கிலோ எடையும் இருந்தது. பின்னர், அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்து, அவர்கள் மூலம் ஜீரோ பாயிண்ட் வனப்பகுதியில் கொண்டுசென்று விட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.