பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் சாலைகளில் கழிவுநீர் குளம் போல தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் பேரூராட்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பாலசமுத்திரம் வழியாகத்தான் பழனி சந்தைக்கு வேண்டிய காய்கறிகள், மீன்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் இங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால், சாலையில் கழிவு நீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு பேரூராட்சி நிர்வாகம் சாலைகளை சீரமைத்து, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.