ரூ.151 கோடியில் 4,967 கான்கிரீட் வீடுகள்:  சூரிய மின்னாற்றலுடன் அமைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில் ரூ.151.49 கோடி செலவில் சூரிய மின்னாற்றலுடன் கூடிய 4,967 கன்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில் ரூ.151.49 கோடி செலவில் சூரிய மின்னாற்றலுடன் கூடிய 4,967 கன்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
 திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்பு மற்றும் அகரம் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 45 அங்கன்வாடி மையங்கள் தலா ரூ.6.50 லட்சம் செலவில் மொத்தம் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.  
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம், பொருளாதார நிலையில் நலிவுற்ற பிரிவினர் வசித்துவரும் குடிசை மற்றும் மண் வீடுகளை சூரிய மின்னாற்றலுடன் கூடிய கான்கிரீட் வீடுகளாக மேம்படுத்துவதற்கும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டம் 2016-17ன் கீழ் மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில் மொத்தம் 4,967 வீடுகள் ரூ.151.49 கோடி மதிப்பீட்டில் சூரிய 
மின்னாற்றலுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார்.
 ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ர.குருராஜன், கண்காணிப்பாளர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருதனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com