Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ளதுடன், தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறி சந்தையும் உள்ளது.இங்கு விற்பனையாகும் 60 சதவீத காய்கறிகளை கேரள வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.அதே போல தயிர், வெண்ணெய், பால் பொருள்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
    இதனால் கேரளாவில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கும் தினசரி நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். 
           இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை செல்லும் அமிர்தா விரைவு ரயில் மற்றும் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து எர்ணாகுளத்தில் இருந்து ராமேசுவரம் வரை இயக்கப்பட உள்ள வாராந்திர சிறப்பு விரைவு ரயில் ஆகியவை ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பேருந்து கட்டணத்தை காட்டிலும், ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர் என சமூக ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai