Enable Javscript for better performance
குற்றச் சம்பவங்களை தடுக்கக்கோரி பாமக தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     திண்டுக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லில் தனியார் மஹாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலர் இரா.பரசுராமன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் க.ஜோதிமுத்து, துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். 
     கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:  பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் இயங்கும் 3 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை மற்றும் வழிப்பறி குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு காவல்துறையினர் நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
     கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ரெ.திருப்பதி, ப.ரவிச்சந்திரன், சே.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai