Enable Javscript for better performance
கொடைக்கானலில் வன உயிரின சரணாலயம் வேண்டாம்: சட்டப்பேரவைக் குழுவிடம் விவசாயிகள் மனு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் வன உயிரின சரணாலயம் வேண்டாம்: சட்டப்பேரவைக் குழுவிடம் விவசாயிகள் மனு

    By DIN  |   Published on : 09th February 2018 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலை வன விலங்கு சரணாலயமாக மாற்றுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவினரிடம் வியாழக்கிழமை மனு கொடுத்தனர்.
     கொடைக்கானலில் தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தி பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றனர். செண்பகனூர் பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அகழிகளைப் பார்வையிட்டனர். மேலும் பெருமாள்மலைப் பகுதியிலிருந்து யானைகள் வரும் வழித்தடங்களை பார்வையிட்டனர்.
    இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அக்குழுவினரிடம் கொடைக்கானல் பகுதியை வன உயிரின சரணாலயமாக மாற்றக் கூடாது, புலிகள் காப்பகம் அமைக்க கூடாது, வனப் பகுதியையொட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வருவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். குழுவினருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி. வினய், மாவட்ட வன அலுவலர் முருகன், வருவாய் கோட்டாட்சியர் மோகன்,வட்டாட்சியர் பாஷியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai