Enable Javscript for better performance
சம்பள உயர்வு கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சம்பள உயர்வு கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  தங்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கக்கோரி திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
        திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பிரேம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 2017ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு வழங்கிய பணம் முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஈட்டிய விடுப்புக்கான பணம், அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வழங்கப்பட வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தில் பணிபுரியம் தொழிலாளர்களின் ஊதியம், வாகன பராமரிப்பு ஆகியவற்றின் பேரில் முறைகேடு செய்யும் தனியார் நிறுவனத்தின் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
     இந்த ஆர்ப்பாட்டத்தில் 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    தேனி: தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மாரிச்சாமி தலைமை வகித்தார்.
    இதில், 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களுக்கு அரசு அளித்து வரும் வருடாந்திர சம்பள உயர்வை முழுமையாக வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு சம்பளத் தொகையை அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக வழங்க வேண்டும், சம்பளம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன பராமரிப்பு முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai