Enable Javscript for better performance
பழனி கோயிலில் ஜனவரி  வருவாய் ரூ.17.5 கோடி- Dinamani

சுடச்சுட

    

    பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஜனவரி மாதம் மட்டும் பல்வேறு இனங்கள் மூலமாக ரூ.17.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை காட்டிலும் ரூ.4.5 கோடி அதிகமாகும்.
     பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை, வின்ச், ரோப்கார் கட்டணம், கட்டளை பூஜைகள், தங்கத்தேர் புறப்பாடு, காவடி மற்றும் தரிசன கட்டணம் ஆகியவற்றின் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் தைப்பூசத் திருவிழா நடைபெற்றுள்ள நிலையில், ஜன.1 ஆம் தேதி முதல் ஜன.31 ஆம் தேதி வரையில் பல்வேறு இனங்கள் மூலம் திருக்கோயிலுக்கு ரூ.17 கோடியே 57 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதம் கிடைத்த வருவாயை காட்டிலும் ரூ. 4 கோடியே 55 லட்சத்து ஆறாயிரம் அதிகமாகும். குறிப்பாக தைப்பூசத் திருவிழா நடைபெற்ற பத்து நாள்களில் கிடைத்த வருவாய் இந்த ஆண்டு ரூ.7 கோடியே 67 லட்சத்து 65 ஆயிரத்து 395 . இது கடந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவின் போது கிடைத்த வருவாயை காட்டிலும் ஒரு கோடியே 51 லட்சத்து 86 ஆயிரத்து 676 ரூபாய் அதிகம் ஆகும். இந்த வருவாயில் முடிக் காணிக்கை, விடுதி கட்டணம் போன்றவை சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai