Enable Javscript for better performance
பழனி மலைக்கோயிலில் தீயணைப்பு வசதிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை தீயணைப்புக்காக நிறுவபப்பட்டுள்ள குழயய் இணைப்புகளை (நீர்த் தும்பிகளை) வியாழக்கிழமை  இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.
        இதுகுறித்து இணை ஆணையர் செல்வராஜ் கூறியது: 
      பழனி மலைக்கோயிலில் தீத்தடுப்புக்கான அமைப்புகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளன. மலைக்கோயிலில் வின்ச், ரோப்கார், படிவழிப்பாதை, பஞ்சாமிர்தம் தயார் செய்யும் இடம், பிரசாத ஸ்டால் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சுமார் நூறு தீத் தடுப்பான்கள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த மாதம் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான சான்றுகள் பெறப்பட்டுள்ளது. மலைக்கோயிலில் சுமார் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளவுள்ள மேல்நிலைத் தொட்டி உள்ளது. தவிர மலைக்கோயிலில் 9 இடங்களில் தீயணைப்பு குழாய் இணைப்புகள்  நிறுவப்பட்டுள்ளன. இதில் தண்ணீரை உந்தித்தள்ள இருபது குதிரைத்திறன் மற்றும் ஐந்து குதிரைத்திறன் உள்ள மோட்டார்கள் உள்ளன. ஒவ்வொரு இணைப்புக்கும்  சுமார் 30 மீட்டர் நீள குழாய்கள் உள்ளன. இவற்றின் செயல்பாடு பரிசோதனை செய்யப்பட்டது.பக்தர்கள் கொளுத்தும் சூடம், சன்னதியில் நெய் தீபம் என அனைத்துமே கண்காணிப்பாளர்கள், பேஷ்கார்களால் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai