Enable Javscript for better performance
ரெங்கநாதபுரம் பகுதியில் பிப்ரவரி 9 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (பிப். 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மின் உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்திருப்பதாவது: ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
     எனவே ரெங்கநாதபுரம், தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, காசிபாளையம், நல்லபொம்மன்பட்டி,   வாங்கலாபுரம், ராசாகவுண்டனூர், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி,   வாங்கிலியகவுண்டன்புதூர், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு ஆகிய இடங்களில் அன்று காலை 9 முதல்   பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத்  தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai