Enable Javscript for better performance
வடமதுரையில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வடமதுரை வட்டாரத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     வடமதுரை ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டாரத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, 100 நாள் வேலை திட்டத்தை அனைத்து குடும்பங்களும் பயன்பெறும் வகையில் முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஊரக வேலை திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai