Enable Javscript for better performance
வத்தலகுண்டு பயனாளிகளுக்கு இலவச வேட்டி-சேலை- Dinamani

சுடச்சுட

    

    தினமணி செய்தி எதிரொலியாக வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
        பொங்கல் பண்டிகை முடிந்து பல நாள்களாகியும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு  வேட்டி சேலை வழங்கப்படாததால்,  பயனாளிகள்  அதிருப்தி அடைந்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை தினமணியில் செய்தி வெளியானது. 
     இதன் எதிரொலியாக பற்றாக்குறையாக இருந்த 2 ஆயிரம் வேட்டி சேலைகள், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கடைகளிலிருந்து வத்தலகுண்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் வத்தலகுண்டுவில் உள்ள 10 ரேஷன் கடைகளுக்கும், கிராம நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வேட்டி சேலைகள் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன. 
     இந்நிலையில், கடை எண் 1-இல் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் துரைராஜ், காந்திநகர் பகுதியில் உள்ள கடை எண்.5-இல் முன்னாள் கவுன்சிலர் நாகூர் கனி ஆகியோர், பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கும் பணிகளை துவக்கி வைத்தனர். பிற கடைகளில் வெள்ளிக்கிழமை வேட்டி சேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai