Enable Javscript for better performance
"வளர் இளம் பெண்களை பாதுகாக்க பஞ்சாலைகளில் ஆய்வு தேவை'- Dinamani

சுடச்சுட

    

    "வளர் இளம் பெண்களை பாதுகாக்க பஞ்சாலைகளில் ஆய்வு தேவை'

    By DIN  |   Published on : 09th February 2018 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வளர் இளம் பெண்களின் பாதுகாப்பு கருதி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பஞ்சாலைகளில் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    இதுகுறித்து திருப்பூர் மக்கள் அமைப்பின் நிர்வாகி என்.பழனிச்சாமி தெரிவித்துள்ளதாவது:
     திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள தனியார் பஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலப்பூர் அடுத்துள்ள கல்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகள் தர்ஷினி (14) மர்மமான முறையில் தற்கொலை செய்துள்ளார். 7ஆம் வகுப்பில் இடைநின்று,  கடந்த  6 மாதங்களுக்கு  முன்பு பணியில் சேர்ந்துள்ளார். இதுபோல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வளர் இளம் பெண்கள் பலர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். 
     வளர் இளம் பெண்கள் தொடர்பான தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையாக தெரிவிக்கப்படுவதில்லை. தர்ஷினி தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற நிலை இனி தொடரமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். உரிய முறையில் ஆய்வு செய்து, பணி பாதுகாப்பு, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி கிடைப்பதற்கும் வழி ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைகளை பணியில் அமர்த்துவதை தடுக்க வேண்டும். 
    பஞ்சாலைகளில் உள்புகார் குழு கட்டாயம் அமைத்து, மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai