திண்டுக்கல்லில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பெய்த மழையினால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பெய்த மழையினால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால், பல இடங்களில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், திண்டுக்கல் மாவட்டத்தில்  வெயிலின்  தாக்கம் திங்கள்கிழமை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மிதமான மழை பெய்தது.
நீண்ட நாள்களுக்கு பின் பெய்த இந்த மழையினால், தொடர்ந்து அதிகரித்து வந்த வெப்ப நிலை மாறி குளிர்ச்சி நிலவியது. திண்டுக்கல் நகர், சிறுமலை, நத்தம், குஜிலியம்பாறை, வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்தது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழனி: பழனியில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சூழல் நிலவியது. மேலும் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாத நிலையில், மாலையிலும் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையால், விவசாயத்துக்கும், நிலத்தடி நீருக்கும் எந்த பயனில்லாவிட்டாலும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com