Enable Javscript for better performance
சாணார்பட்டியில் குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    சாணார்பட்டியில் குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 24th March 2018 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
    சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டன்செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, கடந்த சில வாரங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதியினர், காலிக் குடங்களுடன் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஒன்றிய அலுவலர்கள், போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    பின்னர், 2 நாள்களுக்குள் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai