Enable Javscript for better performance
பழனி கோயிலில் டிஐஜி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பழனி மலைக்கோயிலில் திண்டுக்கல் சரக டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா தொடங்குகிறது. இவ்விழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானுக்கு தீர்த்த அபிஷேகம் செய்வது வழக்கம். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி., ஜோஷி நிர்மல்குமார், திண்டுக்கல் எஸ்பி., சக்திவேல் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். மலையடிவாரத்தில் பக்தர்கள் செல்ல ஏற்படுத்தப்பட்டுள்ள வரிசைகள், குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். பழனி பேருந்து நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது, பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், டிஎஸ்பி., முத்துராஜன், திருக்கோயில் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai