Enable Javscript for better performance
பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு- Dinamani

சுடச்சுட

    

    பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு

    By DIN  |   Published on : 24th March 2018 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய, பிரதமர் நரேந்திர மோடி மீது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
    இதுகுறித்து திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மார்ச் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இந்த விவகாரத்தில், சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி கர்நாடக அரசை கலைக்க (டிஸ்மிஸ்) வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம், விவசாயிகளையும், விவசாயத் தொழிலையும் அழிக்கும் முயற்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. தமிழகத்தில் வறட்சியே இல்லை என பொய்யான தகவலை பரப்புகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்து, எங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து வருகிறோம். இறுதியாக சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து பேச உள்ளோம். தில்லியில் போராட்டம் நடத்திய போது எங்களை வந்து சந்தித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தற்போது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பது ஏமாற்றளிக்கிறது. பிரதமரின் இல்லம் முன் தூக்கு கயிறு போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்தால், நதிகள் இணைப்பு, கடன் தள்ளுபடி, விவசாய விளை பொருளுக்கு உரிய விலை என அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai