Enable Javscript for better performance
இந்து மக்கள் கட்சி சார்பில் ராமராஜ்ஜிய ரத ஊர்வலம்: அர்ஜூன் சம்பத்- Dinamani

சுடச்சுட

    

    இந்து மக்கள் கட்சி சார்பில் ராமராஜ்ஜிய ரத ஊர்வலம்: அர்ஜூன் சம்பத்

    By DIN  |   Published on : 31st March 2018 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில்  இந்து மக்கள் கட்சி சார்பில் ராமராஜ்ஜிய ரதயாத்திரை நடத்தப்பட உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார்.
    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்  வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.  பின்னர் அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 
    பின்னர் அவர் அளித்த பேட்டி:  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்றியுள்ளது.  இதை கண்டித்து இந்து மக்கள் கட்சி  மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.  தமிழக அரசு இச்செயலை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  
    மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆன்மீக அரசியலையும் செய்யவில்லை, தேசிய அரசியலையும் செய்யவில்லை.  ஆன்மீக அரசியல் என்றால், தேர்தல் வாக்குறுதியான சிறப்புச்சட்டத்தின் மூலம் இந்நேரம் ராமர்கோயில் கட்டியிருக்க வேண்டும்.  தேசிய அரசியல் என்றால் இந்நேரம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும்.  
    பழனியில் உற்சவர் சிலை செய்யப்பட்டதில் நடைபெற்ற மோசடி இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இதை கண்டுபிடித்த ஐ.ஜி., பொமாணிக்கவேல், இதற்கு காரணமாக அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களை கண்டுபிடித்து சிறைக்கு அனுப்ப வேண்டும்.   
    அதேவேளையில் பழனி நவபாஷாண மூலவர் குறித்த புரளிகளை யாரும் நம்பக்கூடாது.  போகரால் நிர்மாணிக்கப்பட்ட சிலை எந்த சேதமும் ஆகாமல் நன்றாக உள்ளது.  நமது ஆன்மீக நம்பிக்கைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் இதுபோன்ற புரளிகளுக்கு இடம் தரக்கூடாது.  
    வரும் சித்திரை மாதம், தமிழகம் முழுக்க இந்து மக்கள் கட்சி சார்பில் ராமராஜ்ய ரதயாத்திரை நடத்தப்படும்.  ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியலுக்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது என்றார்.
     நிகழ்ச்சியில் பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், நகர செயலாளர் மனோஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai