Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரத்திற்கு சிகிச்சைக்கு வந்த திருப்பூர் மாநகராட்சி பணியாளர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரத்திற்கு சிகிச்சைக்கு வந்த திருப்பூர் மாநகராட்சி பணியாளர் சாவு

    By DIN  |   Published on : 31st March 2018 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் அருகே சிகிச்சைக்கு வந்த திருப்பூர் மாநகராட்சி பணியாளர் உயிரிழந்தார். 
      திருப்பூர் ஓடைக்கார புதூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (47). இவர் திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 24 வருடங்களாக தண்ணீர் திறந்து விடும் வேலை செய்து வந்துள்ளார்.
       இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக காசநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    வியாழக்கிழமையன்று அதிகாலை சந்திரசேகர் திருப்பூரில் இருந்து அம்பிளிக்கை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அப்போது அவருக்கு உடல்நிலை மோசமடைத்துள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை  மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே  சந்திரசேகர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai