Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சுரைக்காய் விலை வீழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சுரைக்காய் விலை வீழ்ச்சி

    By DIN  |   Published on : 31st March 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சுரைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
       ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கடந்த சில நாட்களாக  சுரைக்காய் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 
    கடந்த வாரம் ஒரு கிலோ சுரைக்காய் ரூ.3 முதல் 4 வரை விற்பனையானது. 
          இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று சுரைக்காய் வரத்து அதிகரித்தின் காரணமாக விலை மேலும் வீழ்ச்சியடைந்து, கிலோ ரூ.1.50-க்கு விற்பனையானது. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் தக்காளி 14 கிலோ பெட்டி ரூ.100, டிஸ்கோ கத்திரிக்காய் 30 கிலோ பை ரூ.200, கரும்பு முருங்கை கிலோ ரூ.11, செடி முருங்கை ரூ.9, மர முருங்கை ரூ.8, வெண்டைக்காய் ரூ.20, பச்சை பயிர் ரூ.32, மாங்காய் நீலம் ரூ.18, செந்தூரம் ரூ.20, கல்லாமை ரூ.28க்கு விற்பனையானது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai