Enable Javscript for better performance
கொடைக்கானலில் கொட்டும் மழையில் சிலுவைப்பாதை ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் கொட்டும் மழையில் சிலுவைப்பாதை ஊர்வலம்

    By DIN  |   Published on : 31st March 2018 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புனித வெள்ளியை முன்னிட்டு கொடைக்கானல் அருகே  நாயுடுபுரத்தில் கொட்டும் மழையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிலுவைப்பாதையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 
    புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் திருபாடுகளை குறிக்கும் வகையில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும் இந்நிலையில் கொடைக்கானலில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் சார்பில் மறைவட்ட அதிபர் எரோணிமுஸ் தலைமையில் சிலுவைப்பாதை  ஊர்வலம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து சென்பகனூர் புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத் தந்தை ஏஞ்சல்ராஜ் தலைமையிலும், பெருமாள்மலை புனித தோமா ஆலயத்திலும், உகார்த்தே நகர் அற்புத குழந்தை யேசு ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின்சகாயராஜ் தலைமையிலும், அட்டுவம்பட்டி புனித லூர்த்து அன்னை ஆலயத்திலும், தாண்டிக்குடி புனித அந்தோணியார் ஆலயத்திலும் சிலுவைப்பாதை மற்றும் ஜெபவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
    கொட்டும் மழையில் 
    சிலுவைப்பாதை: 
    கொடைக்கானல் அருகே நாயுடுபுரம் பகுதியில் திடீரென மழை பெய்தது கொட்டும் மழையை பொருட்படுத்தாது புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் சார்பில் நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்குத் தந்தை அடைக்கலராஜ் மற்றும் கிறிஸ்தவர்கள் குடையை பிடித்துக் கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai