Enable Javscript for better performance
கொடைக்கானலில் பங்குனி உத்திரத் திருவிழா: குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு பக்தர்கள் காவடி ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் பங்குனி உத்திரத் திருவிழா: குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு பக்தர்கள் காவடி ஊர்வலம்

    By DIN  |   Published on : 31st March 2018 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில்  குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் பங்குன் உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் காவடி ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
        கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவருக்கு பல்வேறு ஆராதனைகள் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து நாயுடுபுரம் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
    இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர், சன்பில்டர்ஸ் உரிமையாளர் டி.பி.ரவீந்திரன், குறிஞ்சி அரிமா சங்கத்தைச் சேர்ந்த தண்டபாணி, மாரிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம் மற்றும் இந்து முன்னணி இணைந்து நடத்தியது. 
    மின்கம்பியில் பற்றிய தீ
    கொடைக்கானலில் நடைபெற்ற காவடி ஊர்வலத்தின் போது வெடி வெடிக்கப்பட்டது. இந்த வெடி ஏரிச்சாலையிலுள்ள மரத்தின் மீதுபட்டு  மரக்கிளை முறிந்து ஏரியில் விழுந்தது. அதனைத்தொடர்ந்து காவடி ஊர்வலத்தில் பங்கேற்ற  நடனக் கலைஞர்கள் தலையில் உயரமாக கரகம் வைத்து ஆடி வந்தனர். அப்போது மும்முனை மின்சாரக்கம்பி  மீது கரகம் உரசியதால் திடீரென தீப் பிடித்தது.  
      இதனைத் தொடர்ந்து கரகம் வைத்திருந்த நடனக் கலைஞர் கரகத்தை கீழே போட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றம் சிறிது நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai