Enable Javscript for better performance
கொடைக்கானலில் முன்னதாகவே பூத்துக்குலுங்கும் காபி செடிகள்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் முன்னதாகவே பூத்துக்குலுங்கும் காபி செடிகள்

    By DIN  |   Published on : 31st March 2018 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் முன்னதாகவே காபி செடிகளில் வெள்ளைப் பூ பூத்துள்ளதால் விளைச்சல் குறித்து விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
    கொடைக்கானல் கீழ்மலைப்  பகுதிகளான மச்சூர், வாழைகிரி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, வெள்ளகவி, கடுதடி, கே.சி.பட்டி, ஆடலூர், தடியன்குடிசை, பெரும்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் காபி விளைவிக்கப்படுகிறது. 
    கொடைக்கானலில் கடந்த மாதத்தில் அவ்வப்போது மழை  பெய்து  வந்தது. இதனால் காபி செடிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளைப் பூ பூத்து காணப்படுகிறது   பூக்கள்   அதிகமாக பூத்துள்ளதால் வரும் காலங்களில் காபி விளைச்சல் அதிகமாக இருக்குமா  அல்லது  குறைவாக இருக்குமா என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். 
    இதுகுறித்து கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த காபி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியதாவது, காபி செடிகளில் பொதுவாக காபி விளையும் போதும் அறுவடைக் காலஙகளில் காபி செடியில் பூ பூப்பது வழக்கம். கோடை காலத்தில் இந்தாண்டு வழக்கதிற்கு மாறாக முன்கூடியே பூ பூத்துள்ளது. இதனால் வரும் காலங்களில் மழை பெய்வது நல்லது. அப்போது தான் அறுவடை காலமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காபி விளைச்சல் நன்கு இருக்கும். மழையில்லாமல் இருந்தால் காபி விளைச்சல் பாதிப்படையும் எனவே கோடை காலங்களில் பெய்யக் கூடிய மழையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளோம் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai