Enable Javscript for better performance
கொடைக்கானல் சாலைகளில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக்கேடு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் சாலைகளில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக்கேடு

    By DIN  |   Published on : 31st March 2018 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் சாலைகளில் கழிவு நீர் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. 
    கொடைக்கானலில் அப்சர்வேட்டரி, தைக்கால், பிரகாசபுரம் சாலை, ஆனந்தகிரி, அண்ணாநகர், டர்னர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்தும், காட்டேஜ் மற்றும் ஓட்டல்களிலிருந்து வரும் கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளதால் கழிவு நீர் சாலைகளில் செல்கிறது.
    இதனால் அப்பகுதிகளில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. மேலும்  தேங்கியுள்ள கழிவு நீரில் வாகனங்கள்  கடக்கும் போது  நடந்து செல்பவர்கள் மேல் கழிவுநீர் தெளிக்கிறது. 
    எனவே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  கழிவு நீர் குழாய்கள் சேதமடைந்துள்ளதை சரி செய்ய வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai