Enable Javscript for better performance
பங்குனி உத்திர பணிக்கு வந்த  காவலர் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் பங்குனி உத்திர காவல் பணிக்கு வந்த காவலர் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை தோப்பூரை சேர்ந்தவர் காசிராஜன் (30).  இவர் மதுரை ஆறாவது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருகிறார்.  கடந்த இரு தினங்களுக்கு முன் பழனிக்கு பங்குனி உத்திர திருவிழா காவல் பணிக்காக வந்துள்ளார்.  
       இந்நிலையில்  காசிராஜன், வெள்ளிக்கிழமை தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  உடனிருந்த காவலர்கள் அவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  போலீஸார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக காசிராஜன் விஷம் குடித்ததாக தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai