Enable Javscript for better performance
பழனியில் வேல் சங்கமம்  ரதயாத்திரை நிறைவு பெற்றது- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் இருந்து இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் ஆறுபடை வீடுகளுக்கு புறப்பட்ட வேல் சங்கமம் - ரத யாத்திரை வெள்ளிக்கிழமை பழனி வந்து நிறைவு பெற்றது. 
        பழனியில் கடந்த சனிக்கிழமை இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் ஒருவார காலம் பூஜிக்கப்பட்ட ஒன்றரை கிலோ எடையிலான ஆறு வெள்ளி வேல்கள் வேல் சங்கமம் - ரத யாத்திரைக்காக புறப்பாடு செய்யப்பட்டது.  திருப்பரங்குன்றம் குமரவேல், திருச்செந்தூர் வீரவேல், பழனி மருதவேல், சுவாமிமலை ஞானவேல், திருத்தணி தணிகைவேல், பழமுதிர்ச்சோலை சோலைவேல் என பெயரிடப்பட்ட ஆறு வேல்களும் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு பழனி வந்தடைந்தது.  
       பின்னர் வேல்கள் அனைத்தும் கிரிவீதியை சுற்றி, பாத வினாயகர் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு பழனி திருஆவினன்குடி கோயிலுக்கு வழங்கப்பட்டது.  
      நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார். மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி,  இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, ஆர்எஸ்எஸ் மதுரை கோட்ட தலைவர் ராமகிருஷ்ணன், குட்டி ஈஸ்வரபட்டா சுவாமிகள், மெய்த்தவம் அடிகள்  பாஜக மாவட்ட செயலாளர் கனகராஜ்,  இந்து முன்னணி ஜெகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai