Enable Javscript for better performance
பழனி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

    By DIN  |   Published on : 31st March 2018 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பங்குன் உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டத்தை காண வந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு படிவழிப்பாதை, வின்ச், ரோப்கார் போன்ற பகுதிகளிலும், மலைக்கோயிலில் இலவச மற்றும் கட்டண தரிசன வரிசைகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
       விழாவை முன்னிட்டு பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.  
      இன்று(சனிக்கிழமை) தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.  வரும்  ஏப்ரல் 2-ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது. 
     தேரோட்ட நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ்,  துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, தனசேகரன், கந்தவிலாஸ் செல்வக்குமார்,  சரவணப்பொய்கை பாஸ்கரன், நவீன்விஷ்ணு,  கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து,  சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், செந்தில்குமார்,   பாலாஜி கருத்தரித்தல் மைய இயக்குனர் செந்தாமரைச்செல்வி, திருப்பூர் லாட்ஜ்  மகேஷ்,  முருகனடிமை பாலசுப்ரமணியம்,  ஜெயம் லாட்ஜ் ஜேபி சரவணன், வ.உ.சி. பள்ளி தாளாளர் முத்து, நண்பர்கள் நற்பணி மையம் நாதன், ஜெயராஜ், காண்ட்ராக்டர் நேரு, சுகந்தவிலாஸ் மகேஷ், பொன்னு எலக்ட்ரிகல்ஸ் பொன்னுச்சாமி, அக்வாகேர் சிவக்குமார், விஸ்வநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai