Enable Javscript for better performance
மாவட்ட அளவிலான சிறுகதைப் போட்டி: ஏப்.15-க்குள் கதைகள் அனுப்பலாம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான சிறுகதைப் போட்டி: ஏப்.15-க்குள் கதைகள் அனுப்பலாம்

    By DIN  |   Published on : 31st March 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் இலக்கியக் களம் அமைப்பின் சார்பில், மாவட்ட அளவில் நடைபெறும் சிறுகதைப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், ஏப்.15ஆம் தேதிக்குள் கதைகளை அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக இலக்கியக் களம் அமைப்பின் செயலர் ச.ராமமூர்த்தி  தெரிவித்துள்ளது: புதுமைப்பித்தன் பிறந்த தினம்(ஏப்.25) மற்றும் உலக புத்தகத் தினத்தை(ஏப்.23) முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அளவிலான சிறுகதைப் போட்டி நடைபெற உள்ளது. முதல் 3 நிலைகளைப் பெறும் சிறுகதைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படும் 10 சிறுகதைகளை தொகுத்து, டிசம்பர் மாதம் நடைபெறும் 7ஆவது புத்தகத் திருவிழாவில், நூலாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     சிறுகதைகள் இதுவரை வெளிவராதவையாகவும், சொந்தமாக எழுதப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். கதையின் அளவு "ஏ4' தாளில் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரே பக்கத்தில் தட்டச்சு, மின்னச்சு செய்த 3 பிரதிகள் அனுப்ப வேண்டும். அனுப்புநரின் முழு முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி போன்ற முழு விவரங்களுடன் அனுப்ப வேண்டும். முடிவுகள் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.  கதைக்கரு மற்றும் நிகழ்களம் சமூக மேம்பாட்டிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. 
    சிறுகதைகளை ஏப்.15ஆம் தேதிக்கு முன்னதாக, திண்டுக்கல் இலக்கியக் களம், ந.வெங்காடசலம் அரங்கம், பிச்சாண்டி பில்டிங் வளாகம், திண்டுக்கல் 624001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
     இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 94864-67205, 99941-75111 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai