Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் 1.21 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் 1.21 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க ஏற்பாடு

    By DIN  |   Published on : 18th May 2018 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டத்தில் 1.21 லட்சம் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் மண் வள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சுருளியப்பன் வியாழக்கிழமை தெரிவித்தது: மண் வளத்தை பாதுகாத்து, உணவு தானிய உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்து மண் வள அடையாள அட்டையை வழங்கி வருகிறது.
     அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2.39 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க திட்டமிடப்பட்டது. இதில் முதல்கட்டமாக 1.18 லட்சம் விவசாயிகளுக்கு கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2 ஆம் கட்டமாக நடப்பு நிதியாண்டில் (2018-19) 1.21 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான மண் மாதிரி பரிசோதனை விரைவில் நடைபெற உள்ளது.
     இந்த வாய்ப்பினை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொண்டு, மண் பரிசோதனை செய்து, உரத்தின் மூலம் ஏற்படும் கூடுதல் பொருள் செலவை 
    தவிர்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai