Enable Javscript for better performance
பழனியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில்  ஆர்எஸ்எஸ் சார்பில் வியாழக்கிழமை அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    பழனியை அடுத்த சுக்கமநாயக்கன்பட்டியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் கடந்த மாதம் 28 ஆம் தேதி பண்புப் பயிற்சி முகாம் துவங்கியது.  இருபது நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து 123 இளைஞர்கள் பங்கேற்றனர். 
    முகாமிற்கு ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  ஆர்எஸ்எஸ்  அகிலபாரத பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி,  இணை பொதுச் செயலாளர் முகுந்தா உள்ளிட்டோர் பயிற்சிகளை வழங்கினர். முகாமில்  இளைஞர்களுக்கு சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட கலைகள் கற்றுத் தரப்பட்டன. 
    வியாழக்கிழமை முகாம் நிறைவை முன்னிட்டு பழனியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.  கொடிக்கு மரியாதை செய்யப்பட்டு மலர்கள் தூவி தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் துவங்கியது.  கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.  ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.  ஊர்வல நிறைவில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai