Enable Javscript for better performance
பழனியில் சிகிச்சைக்கு வந்தவர் குத்திக்கொலை: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் சிகிச்சைக்கு வந்தவர் குத்திக்கொலை: இளைஞர் கைது

    By DIN  |   Published on : 18th May 2018 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனியில் தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்தவரை கத்தியால் குத்திக் கொன்று காரில் தப்பிய இளைஞரை போலீஸார் வியாழக் கிழமை கைது செய்தனர்.
    பழனி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ரவிராஜா (62).  இவர் வீடு, காலி மனைகளை வாங்கி விற்கும் வேலை 
    செய்து வருகிறார்.  இவரது கார் ஓட்டுனராக சென்னையை சேர்ந்த ராஜூ மகன் சந்துரு (25)  வேலை பார்த்து வந்துள்ளார்.  கடந்த மாதம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு சந்துருவை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.
    இந்நிலையில் ரவிராஜா சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை டயாலிசிஸ் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனைக்கு வந்த சந்துரு, ரவிராஜா மீது திடீரென பாய்ந்துள்ளார். சந்துரு, ரவிராஜாவின் வாயைப்பொத்தி கத்தியால் கழுத்தை அறுத்ததோடு, வயிற்றிலும், காலிலும் குத்தியுள்ளார்.  
    இதைபார்த்த அருகேயிருந்த நோயாளிகள் சத்தம் எழுப்பவே, சந்துரு அங்கிருந்து வெளியேறி ரவிராஜாவின் காரை எடுத்து தப்பியுள்ளார்.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி டவுன் போலீஸார் அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.  
    இதையடுத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரில் சென்ற சந்துருவை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    இதனிடையே கத்திக் குத்தில் படுகாயமடைந்த ரவிராஜா மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai