Enable Javscript for better performance
பழனி-கொடைக்கானல் சாலையில் பாறையில் வேன் மோதல்: 5 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி-கொடைக்கானல் சாலையில் பாறையில் வேன் மோதல்: 5 பேர் காயம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருகே மலைச்சாலையில் வியாழக்கிழமை சுற்றுலா வேன் பாறையில் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 
     திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே உள்ள பட்டாபுரத்தை அடுத்த சித்தக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் (62).  இவர் ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
    இவர் தனது குடும்பத்தினர்கள் 15 பேருடன் கடந்த திங்கள்கிழமை வேனில் சுற்றுலா 
    கிளம்பியுள்ளனர்.  வேனை  டில்லி (37) என்பவர் ஓட்டியுள்ளார். 
    புதன்கிழமை கொடைக்கானலை சுற்றிப் பார்த்து விட்டு, வியாழக்கிழமை மதியம் பழனிக்கு புறப்பட்டனர்.
    பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் சவரிக்காடு அருகே வந்தபோது வேனில் பிரேக் பிடிக்காமல் போனது.  
    இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் டில்லி வேனை சாலையோரம் இருந்த பாறையில் மோதி நிறுத்தியுள்ளார்.  இதில் வேனில் பயணம் செய்த பாளையம், பச்சையம்மள், டிரைவர் டில்லி, மாலதி (27), கீதா(33) ஆகியோர் பலத்த காயம்  அடைந்தனர்.  
    இதுகுறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. ஆம்புலன்ஸ் பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai