Enable Javscript for better performance
வத்தலகுண்டு அருகே அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே புதன்கிழமை இரவு அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற  இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
    பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த பெரியசாமி மகன் பிரகாஷ் (25). நிலக்கோட்டை பகுதியில் உள்ள ரொட்டி தயாரிப்பு ஆலையில் பணிபுரிந்து வந்தார். 
    இந்நிலையில், பழைய வத்தலகுண்டில் இருந்து, வத்தலகுண்டிற்கு பெட்ரோல் வாங்குவதற்காக புதன்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் பிரகாஷ் சென்றுள்ளார். அப்போது கேரள மாநிலம் சங்கனாச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து,  பெரியகுளம் புறவழிச்சாலையில்  சென்ற இருசக்கர வாகனம் மீது  மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     இதுகுறித்து தகவல் அறிந்த பிரகாஷின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். ஆத்திரமடைந்த அவர்கள், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள், கீழே இறங்கி நின்றதால் காயமின்றி தப்பினர்.  இந்த விபத்து குறித்து வத்தலகுண்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai