திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு புதிய அரசுப் பேருந்துகள்: அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு புதிய அரசுப் பேருந்துகளை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு புதிய அரசுப் பேருந்துகளை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகளும், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை பழைய கரூர் சாலையில் வழிகாட்டி விநாயகர் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.17.45 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
 இப்பணியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், "நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட திண்டுக்கல்-திருச்சி சாலை இணைப்பு மேம்பாட்டு பணி ரூ.16.54 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலை மேம்பாட்டுப் பணி ரூ.20.35 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் திண்டுக்கல்- சிலுவத்தூர்-மணக்காட்டூர் சாலை இணைப்பு மேம்பாட்டுப்பணி ரூ.65.75 கோடி மதிப்பீட்டிலும் என, மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகள் ரூ.120 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது என்றார்.
  பின்னர், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை, சேலம், திருச்சி, கம்பம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கும் வகையில் 11 புதிய பேருந்துகளையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில், திண்டுக்கல் எம்.பி.  உதயக்குமார், முன்னாள் மேயர் மருதராஜ், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஜீவா, கண்காணிப்புப் பொறியாளர் பழனியப்பன், போக்குவரத்துத்துறை பொது மேலாளர் ராஜேஸ்வர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com