பாலிடெக்னிக் ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
By DIN | Published on : 12th September 2018 05:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. கல்லூரி முதல்வர் கந்தசாமி போட்டிகளை துவக்கி வைத்தார். 8 கல்லூரிகள் பங்கேற்றன. பூப்பந்தாட்டப் போட்டியில் கோவை பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம், பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றன. டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா பாலிடெக்னிக் முதலிடம், தாராபுரம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு கல்லூரி தாளாளர் செந்தில்குமார் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.