அபிராமி அம்மன் சிலையை மலைக்கோட்டையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் : ராம.கோபாலன்

அபிராமி அம்மன் சிலையை திண்டுக்கல் மலைக்கோட்டையில் பிரதிஷ்டை செய்வதற்கு இந்து முன்னணியினர் முயற்சிக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் தெரிவித்தார்.


அபிராமி அம்மன் சிலையை திண்டுக்கல் மலைக்கோட்டையில் பிரதிஷ்டை செய்வதற்கு இந்து முன்னணியினர் முயற்சிக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் தெரிவித்தார்.
திண்டுக்கல் நகர் மற்றும் ஒன்றிய அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளின் ஊர்வலம் திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து தொடங்கியது.
ஊர்வலம் தொடங்குவதற்கு முன், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் பேசியதாவது:
இந்து முன்னணியினர் மேற்கொண்ட முயற்சியினால் தான், 30 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் ஜலகண்டேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதேபோன்ற முயற்சிகளை, இந்து முன்னணியினர் மேற்கொண்டால் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய முடியும். அதற்கு, இந்துக்கள் ஒன்று பட வேண்டியது அவசியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com