சீர்மரபினர் சமுதாயத்தினர், தங்களை சீர்மரபினர் பழங்குடியினராக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி அளித்த மனுக்கள் மீது சாதகமான முடிவு எடுக்கப்படும் என ஆய்வுக்குழுத் தலைவரும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலருமான அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.
சீர்மரபினர் சமுதாயத்தினர் என்பதை, சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக பரிசீலிக்க அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுவின் தலைவரும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலருமான அதுல்ய மிஸ்ரா தலைமை வகித்தார்.
இதில் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தெரிவித்ததாவது:
68 ஜாதிகளை சேர்ந்தவர்களை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடல் வலு நிறைந்தவர்களாக இருப்பதால், ராணுவம், காவல்துறையில் பணி வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், விளையாட்டுத் துறையில் சிறப்பான பயிற்சி அளித்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும். சீக்கியர் படைப் பிரிவு போல், சீர்மரபினர் இளைஞர்களை கொண்ட படைப் பிரிவினை உருவாக்க வேண்டும். அதேபோல் சீர்மரபினர் பிரிவுகளில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து பெண்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கல்வியின் முக்கியத்துவம், தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும் என்றனர்.
அதைத்தொடர்ந்து குழுத்தலைவர் அதுல்ய மிஸ்ரா கூறுகையில், "சீர்மரபினர் சமுதாயத்தினர் என்பதை, சீர்மரபினர் பழங்குடியினர் என மாற்றம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது சாதகமான முடிவினை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும்' என்றார்.
கூட்டத்தில் குழுவின் உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலருமான ஆ.கார்த்திக், வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லெட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் எம்.மதிவாணன், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் வி.சம்பத், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சென்னமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி வகுப்பைறைகள், மாணவியர் விடுதி ஆகியவற்றில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


