ஒட்டன்சத்திரத்தில் அமமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
By DIN | Published On : 01st April 2019 05:53 AM | Last Updated : 01st April 2019 05:53 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரத்தில் அமமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் பி. ஜோதிமுருகனை அறிமுகம் செய்து
வைக்கும் கூட்டம், தாராபுரம் சாலையில் உள்ள தேர்தல்
அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக செயலர் கே.பி. நல்லசாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாநகரச் செயலர் ராமுத்தேவர், முன்னாள் எம்.பி. குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அமமுக மாநில மகளிரணிச் செயலர் சி.ஆர். சரஸ்வதி கலந்துகொண்டு, அமமுக வேட்பாளர் பி. ஜோதிமுருகனைஅறிமுகப்படுத்திப் பேசினார். இதில், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலர் ஜெ. ஜமால்தீன், ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றியச் செயலர் ஜ.ஆர். சந்திரன், வடக்கு ஒன்றியச் செயலர் சண்முகவேல், நகரச் செயலர் தங்கதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.