பழனி மலைக் கோயிலில் வைரவேல், வெள்ளிவேல் பூஜை

பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை வெள்ளி வேல் மற்றும் வைரம் பதித்த தங்கவேலுடன் குவிந்த

பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை வெள்ளி வேல் மற்றும் வைரம் பதித்த தங்கவேலுடன் குவிந்த பனிரெண்டார் தீர்த்தக்காவடியினர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
 பழனி பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெற்ற பின் வருவது விஜயாபுரம், பொன்னுக்காளிபாளையம், அமராபதிபாளையம் கூடிய பனிரெண்டார் தீர்த்தக்காவடி ஆகும். இந்த காவடி கூட்டம் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பழனிக்கு பாதயாத்திரை வருகின்றனர். பங்குனி உத்திரத்தன்று பவானியில் தீர்த்தம் முத்தரித்து பழனி நோக்கி தொடங்கிய பாதயாத்திரையில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
 பாதயாத்திரையின் போது வெள்ளி வேல்கள், வைரக்கற்கள் பதித்த தங்கவேல் ஆகியன வழிபாட்டுக்காக கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த காவடி குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பழனி வந்து கிரிசுற்றி மடத்தில் தங்கி திங்கள்கிழமை உச்சிக்காலத்தின் போது மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் கீழிறங்கிய காவடிக்குழுவினர் மடத்தில் வெள்ளி வேல், வைரம் பதித்த தங்கவேல்களை வைத்து சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அலங்காரமும் செய்தனர்.  மஹாதீபாராதனையைத் தொடர்ந்து அன்னத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
 பூஜைக்கான ஏற்பாடுகளை காவடி கூட்டத்தின் தலைவர் சபாபதி, செயலர் பத்மநாபன், சந்திரசேகரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com