சுடச்சுட

  

  கணவரிடம் சேர்த்து வைக்கக்கோரி  மாமனார் வீடு முன்பு பெண் தர்னா

  By DIN  |   Published on : 16th April 2019 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பழனியில் பெற்றோருடன் வசிக்கும் கணவரை சேர்த்து வைக்க வலியுறுத்தி, மாமனார் வீட்டின் முன்பு பெண் இரு குழந்தைகளுடன் தர்னா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
   திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோயில் அருகே வசிப்பவர் ராஜா. இவர் டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் நெய்வேலியை சேர்ந்த கிரிஜாமணி என்பவருக்கும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.  
  கிரிஜாமணி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.  இவர்களுக்கு ஸ்ரீசந்தோஷ் பாண்டியன்(13) என்ற மகனும், ஹர்ஷவர்த்தினி(5) என்ற மகளும் உள்ளனர்.  இவர்கள் குடும்பத்துடன் பழனி இந்திரா நகரில் வசித்து வருகின்றனர். கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த 3 மாதங்களாக ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்காமல் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 
   இதனையடுத்து சனிக்கிழமை இரவு கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கிரிஜாமணி தனது மகன், மகளுடன் மாமனார் வீட்டு வாசலில் அமர்ந்து திடீர் தர்னாவில் ஈடுபட்டார்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கிரிஜாமணியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் வெளியூர் சென்றுள்ளதால், அதிகாரிகள் வந்த பிறகு குடும்பத்துடன் சேர்த்து வைப்பதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து கிரிஜா மணி தனது குழந்தைகளுடன் வீட்டுக்குச் சென்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai