சுடச்சுட

  

  பழனியில் ரேக்ளா குதிரை வளர்ப்போர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 
  தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்புக்காக தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை பழனியில் ரேக்ளா குதிரை வளர்க்கும் சங்கத்தினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.    பழனி பேருந்து நிலையம் குளத்து சாலையில் தொடங்கிய பேரணியில், இருபதுக்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.  பேரணியானது பழனி நகர் மற்றும் மானூர், நரிக்கல்பட்டி கோரிக்கடவு என சுற்றுவட்டார கிராமங்கள் வழியாகச் சென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai