சுடச்சுட

  

  வத்தலகுண்டு அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

  By DIN  |   Published on : 16th April 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வத்தலகுண்டு அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
   திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள வேங்கடாஸ்திரி கோட்டை பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. வீடுகள் நிறைந்த அந்த பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தனர்.
   பிரச்னை குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: கடந்த 3ஆம் தேதி முதல் மீண்டும் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகள் மட்டுமின்றி, பள்ளிக் கூடமும் அந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பது தொடர்பாக, எங்கள் பகுதி மக்களிடம் எதுவும் கூறவில்லை. அரசு அலுவலர்கள் தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், உரிய அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடை விதித்து, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai