பழனியில் வருவாய்த் துறை நிலத்துக்கு இரு தரப்பினர் உரிமை கோரி புகார்

பழனியை அடுத்த ஆயக்குடியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு

பழனியை அடுத்த ஆயக்குடியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு, இரு தரப்பினர் உரிமை கோரி ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
        திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் பாண்டிய வேளாளர் சமூகத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மடம் உள்ளது.  இந்த மடத்தில், தனியார் நர்சரி பள்ளி சுமார் 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மடம் உள்ள சர்வே எண்- 1737, 1738 மற்றும் 1739 ஆகியன வருவாய்த் துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் என அரசு வரைபடத்தில் உள்ளது.
     இந்த இடத்தில் பலரும் கட்டடம் கட்டி பயன்படுத்தி வரும் நிலையில், வருவாய்த் துறை இந்த நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் செய்து வருகிறது. எனவே, பாண்டிய வேளாளர் மடத்தில் இயங்கி வரும் நர்சரி பள்ளியை காலி செய்து தரவேண்டும் என, ஆயக்குடி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 50-க்கும் மேற்பட்டோர் சென்று புகார் மனு அளித்தனர். 
      இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் காலி செய்வதற்கு இடைக்காலத் தடை பெற்றுள்ளது தெரியவந்தது. எனினும், காவல் துறையினர் பள்ளி நிர்வாகியிடம் பள்ளியை 6 மாதத்தில் காலி செய்து தருமாறு எழுத்துப்பூர்வமாக உறுதி பெற்றுள்ளனர்.  
      வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தை இரு தரப்பினர் உரிமை கோரி வரும் நிலையில், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com