திண்டுக்கல்: 2,097 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 17.94 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக, மாவட்டம் முழுவதும் 2,097 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையிலும், பெண் அலுவலர்கள் மட்டுமே பணிபுரியும் வகையிலும், சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 5 வாக்குச் சாவடிகள் வீதம், மொத்தம் 35 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த வாக்குச் சாவடிகளில் குறைந்தபட்சமாக 396 வாக்காளர்கள், அதிகபட்சமாக 1,378 வாக்காளர்கள் என மொத்தம் 29,702 பெண் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாதிரி வாக்குச் சாவடிகள் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 4 வீதம் மொத்தம் 28 வாக்குச் சாவடிகள் மாவட்டம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. 
இந்த வாக்குச் சாவடிகளில், ஆண்கள், பெண்கள் என மொத்தம் 26,410 பேர் வாக்களிக்க உள்ளனர். போக்குவரத்து வசதியில்லாத  மலைப் பகுதியிலுள்ள 6 வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதியுடன் புதன்கிழமை காலை வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 
வெள்ளகவி, சின்னூர், பெரியூர் மற்றும் எல்.மலையூர் கிராமங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் குதிரைகள் மூலமாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com